ETV Bharat / bharat

தாயைச் சுத்தியலால் அடித்துக்கொன்ற மகள்: ராஜஸ்தானில் பயங்கரம்! - Girl kills mother with hammer

ஜெய்ப்பூர்: சாதுல்புரில் தாயைச் சொந்த மகளே சுத்தியலால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother
ஜெய்ப்பூர்
author img

By

Published : Mar 16, 2021, 7:51 PM IST

ராஜஸ்தான் மாநிலம் சதுல்பூரில் திகர்லா கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், தனது தாயாரைச் சுத்தியலால் அடித்துக் கொலைசெய்துள்ளார். அச்சமயத்தில், வீட்டில் மிகவும் சத்தமாக இசை ஒலித்துக்கொண்டிருந்ததால், அக்கம்பக்கத்தினருக்குத் தாயாரின் கதறல் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், தாயைக் கொலைசெய்த மகள், உடனடியாக காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கொலைசெய்த பெண்ணுக்கு மனநலப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: உயர் மின் கம்பியிலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடிய திமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.