இன்று ஆசியாவின் சிங்கங்கள் கிர் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சிங்கங்கள் மெசபடோமியா, அரேபியா, பெர்சியா உள்ளிட்ட நாடுகளிலும் காணப்பட்டன. மனிதர்களால் வன விலங்குகளின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து, இந்தச் சிங்கங்கள் காலப்போக்கில் அழியும் தருவாயில் உள்ளன.
இன்று கிர் காடுகளில் மட்டுமே இந்தச் சிங்கங்கள் காணப்படும் நிலையில் அதற்குப் பின் எத்தனை கடின உழைப்பு உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 1884ஆம் ஆண்டில் சௌராஷ்டிராவுக்கு வெளியே ஒரே ஒரு சிங்கம் இருப்பது பதிவுசெய்யப்பட்டது. 1963ஆம் ஆண்டில் கிர்னர் பகுதியில் இறுதியாக ஒரு சிங்கம் காணப்பட்டது.
தற்போது அதே கிர்னர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிங்கங்களின் இனப்பெருக்கம், அதன் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இக்காடுகள் உருவாக்கப்பட்டன.
1911ஆம் ஆண்டு ஜூகானத் நவாப் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டு சிங்கங்கள் வேட்டையாடப்படுவதை தடைசெய்தார். சிங்கங்கள் வேட்டையாடப்படுவதற்கு மரண தண்டனை கொடுக்கவும் முடிவுசெய்தார். இதனையடுத்து சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இன்றைய நிலையில் கிர் காடுகளில் மட்டும் சுமார் 300 சிங்கங்கள் காணப்படுகின்றன. கிர் காடுகள் தவிர்த்து ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த சிங்கங்கள் இருக்கின்றன. தற்போது வனத் துறையும் சிங்கங்களைச் சுடவும் வேட்டையாடவும் தடைவிதித்துள்ளது.
இதையும் படிங்க: கடல் பாதுகாக்க வேண்டிய பாரம்பரிய பொக்கிஷம் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்