ETV Bharat / bharat

கர்நாடகாவில் தீயணைப்பு பணிக்கு பிரம்மாண்ட ஏணி வாகனம்..!

author img

By

Published : Oct 21, 2022, 3:05 PM IST

கர்நாடகா தீயணைப்புத் துறைக்கு 90 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட ஏணி ஒன்றை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வழங்கி தொடங்கி வைத்தார்.

கர்நாடகாவில் தீயணைப்பு பணிக்கு பிரம்மாண்ட ஏணி வாகனம்

பெங்களூரு: தீயணைப்புத் துறைக்காக 90 மீட்டர் உயரமுள்ள ஏணி வண்டியொன்றை முதலமைச்சர் பசவராஜ் பொம்மைத் தொடங்கிவைத்துள்ளார். மேலும், தொடங்கி வைத்த இந்த பிரம்மாண்ட ஏணிவாகனத்தைக் கொண்டு 30 மாடிகள் வரைச் செல்லமுடியும்.

இதுகுறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “பெங்களூரு நகரம் நாட்டின் முக்கியமான நகரமாகும். இதைச் சரியாகக் காண்பிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 5,000 வாகனங்கள் நம் ரோட்டில் பயணிக்கின்றன. ஆனால் நமது சாலை எந்த சேதமுமாகாமல் அப்படியே தான் உள்ளது. போக்குவரத்து காவலர்களும், போக்குவரத்து நெரிசலை முறையாகச் சரிசெய்து வருகின்றனர்.

நகரம் முழுவதும் சிறப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மும்பைக்குப் பிறகு இத்தகைய பெரிய தீயணைப்பு ஏணி வாகனம் நம்மிடம் தான் உள்ளது. இதை இரண்டரை வருடங்களாகப் பெங்களூருக்கு கொண்டு வர வேண்டுமென எண்ணினோம். கரோனா காலகட்டத்தால் அது தள்ளிப்போய்விட்டது” எனப் பேசினார்.

கர்நாடகா அரசு ஏற்கனவே 32 மீட்டர், 54 மீட்டர்களில் தீயணைப்பு ஏணி வாகனங்களை அம்மாநில தீயணைப்புத் துறைக்கு வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது 90 மீட்டர் உயரமுள்ள ஏணி வாகனத்தையும் அம்மாநில அரசு தீயணைப்புத் துறைக்கு வழங்கியுள்ளது. இந்த பிரம்மாண்ட ஏணியை 31.19 கோடிக்கு ஃபின்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து கர்நாடகா அரசு வாங்கியுள்ளது.

இதையும் படிங்க: பார்க்கிங் தகராறில் 42 வயது நபருக்கு துப்பாக்கிச்சூடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.