ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் பங்கேற்றார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், பல தலைவர்களிடம் பல விஷயங்களை கண்டுநான் வியந்துள்ளேன். நான் கிராமத்து பின்னணியை சேர்ந்தவன். அதை பெருமையாகவே கொள்கிறேன். இளம் வயதில் டீ விற்ற நமது பிரதமரும் கிராமத்து பின்னணியிலிருந்து வந்தவர்தான்.
அவரிடம் கருத்தியல் ரீதியாக பல வேறுபாடுகளை கொண்டவன். இருப்பினும் அவர் தனது உண்மைதன்மையை ஒரு போதும் மறைத்ததில்லை. தனது எளிமையான பின்னணியை ஒருபோதும் மறவாதவர் மோடி எனப் புகழ்ந்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெறவிருந்த குலாம் நபி ஆசாத்தை கண்ணீர் மல்கி பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜகவுடன் கைகோர்க்கப் போகிறார் மம்தா; சீதாராம் யெச்சூரி எச்சரிக்கை