ETV Bharat / bharat

"ராகுல் காந்தி விவகாரத்தில் நீதிமன்ற சுதந்திரம், ஜனநாயக கொள்கையை எதிர்பார்க்கிறோம்" - ஜெர்மனி - germany reacts rahul gandhi dis qualiffy

ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கம் விவகாரத்தில் நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்ப்பதாக ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 30, 2023, 12:07 PM IST

டெல்லி : ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்க விவகாரத்தை கவனத்தில் கொண்டு உள்ளதாகவும், தங்களுக்கு தெரிந்த வகையில் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் நிலையில் அவர் இருக்கிறார் என்றும் ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடாக மாநிலம் கோலாரில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார்.

“நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தது. மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனி விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள் காட்டி, ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது.

மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் "சங்கல்ப் சத்தியாகிரக" போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்க வழக்கை கவனத்தில் கொண்டு உள்ளதாக ஜெர்மனி வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

ஜெர்மன் அரசின் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதை தெரிவித்தார். மேலும் அவர், "இந்தியாவில் எதிர்க் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக முதல் முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய கருத்துகளை நாங்கள் கவனத்தில் கொண்டு இருக்கிறோம். அவரது, நாடாளுமன்ற எம்.பி. பதவி முடக்கம் பற்றியும் கவனத்தில் எடுத்து உள்ளோம்.

நாங்கள் அறிந்த வரை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கூடிய நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார் என தெரிகிறது. அதன் பின், இந்த தீர்ப்பு நிலையான ஒன்றா அல்லது அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா என்பது பற்றி தெளிவாக தெரிய வரும்.

ராகுல் காந்தி எம்பி பதவி நீக்க விவகாரத்தில், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள் இருக்க வேண்டும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது" என்று அவர் கூறினார். முன்னதாக இந்திய நீதிமன்றங்களில் உள்ள ராகுல் காந்தி தகுதி நீக்க வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறையினர் துணை செய்தி தொடர்பாளர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறையினர் துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல்ம், "சட்டத்தின் மீதான மரியாதை மற்றும் சுதந்திரத் தன்மையுடன் நீதித் துறை செயல்பட வைப்பது ஜனநாயகத்தின் மூலக்கல் என்றார்.

மேலும் இந்திய நீதிமன்றங்களில் உள்ள ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், கருத்து சுதந்திரம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் கொள்கைகளை பாதுகாப்பதில் மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து இந்தியாவுடன் பலதர தரப்பட்ட கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுடனான ஈடுபாடுகளில், ஜனநாயக கொள்கை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு, கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் பற்றிய முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து முன்னிலைப்படுத்தி இரு நாடுகளின் ஜனநாயகத்தை வலுப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு உறவுகளைக் கொண்ட எந்த நாட்டிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அமெரிக்கா ஈடுபடுவது இயல்பானது மற்றும் நிலையானது என்றும் அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு - இந்தியாவில் இல்லை.. இலங்கையில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.