டெல்லி: இந்தியா - நேபாளம் இடையிலான பாதுகாப்புத்துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்று நாள் பயணமாக இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே நேபாளம் செல்கிறார்.
இந்திய-நேபாள எல்லையில் நிலவிவரும் முக்கியப் பிரச்னைகள் குறித்தும், நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருநாட்டு ராணுவ அலுவலர்களுடனும், உயர் நிலை அலுவலர்களுடனும் இந்தச் சந்திப்பில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டு அரசு ராணுவத் தளபதி பட்டத்தை அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.