ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் போதைப் பொருளான கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மத்தியப் பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அம்மாநிலத்தின் பிந்த் என்ற பகுதியைச் சேர்ந்த காவலர்கள் அமேசான் நிறுவனத்தில் பதிவு செய்த ஆறு நிறுவனங்கள் ஸ்டீவியா இலைகள் என்ற பெயரில் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலங்களை ஆன்லைன் வாயிலாக விற்றது வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த அமேசான் விற்பனை சேவைப் பிரிவின் நிர்வாக இயக்குனர்கள் மீது போதைப்பொருள் சட்டம் பிரிவு 38 கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அன்மையில், ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமேசான் விற்பனையாளர்கள் 48 கிலோ கஞ்சாவை வேன் மூலம் எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர். இந்த சம்பவங்களுக்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு(Confederation of All India Traders) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுமிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் எனவும், லாபம் சம்பாதிக்க எந்த செயலிலும் இதுபோன்ற பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவது வேதனைக்குரியது என CAIT கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்