ETV Bharat / bharat

'சாவர்கர் மன்னிப்பு விவகாரம்' விவாதப்பொருளாக மாறியுள்ள ராஜ்நாத் சிங் கருத்து - அசாதுதீன் ஓவைசி

காந்தி கேட்டுக்கொண்டதன் காரணமாகவே சாவர்கர் ஆங்கிலேய அரசிடம் மன்னிப்புக் கேட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்த கருத்தை பூபேஷ் பாகல், ஆசாதுதீன் ஓவைசி ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

Rajnath Singh
Rajnath Singh
author img

By

Published : Oct 13, 2021, 5:03 PM IST

ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சாவர்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா டெல்லி அம்பேத்கர் மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் சாவர்கர் குறித்து ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், "சாவர்கர் குறித்து பல பொய்கள் பரப்பப்பட்டுவருகின்றன.

சாவர்கர் ஆங்கிலேய அரசிடம் கருணை மனு வைத்து மன்னிப்புக் கேட்டதாக தொடர்ந்து போலித் தகவல் சொல்லப்பட்டுவருகிறது. உண்மையில் தனது விடுதலைக்காக சாவர்கர் கருணை மனு தாக்கல் செய்யவில்லை. அண்ணல் காந்தி சாவர்கர் விடுதலைப் பெற வேண்டும் என ஆங்கிலேய அரசிடம் வலியுறுத்தினார்.

காந்தியின் விருப்பத்தின் காரணமாகவே சாவர்கர் கருணை மனுவை தாக்கல் செய்தார். விடுதலைப் போராட்ட இயக்கம் சுமூகமாக நடைபெற சாவர்கர் விடுதலை பெற வேண்டும் என்பது காந்தியின் விருப்பம்" என்றார்.

பூபேஷ் பாகல் எதிர்வினை

ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்தின் உண்மை தன்மை குறித்து பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர். சிறையில் இருந்த சாவர்கரை காந்தி எப்படி தொடர்பு கொண்டிருக்க முடியும், சாவர்கர் ஆங்கிலேயர்களின் சார்பாகவே செயல்பட்டவர் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் விமர்சித்துள்ளார்.

ஓவைசியின் எதிர்வினை

அதேபோல் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, " பாஜக பொய்யான வரலாறை உருவாக்கி பரப்பிவருகிறது. இதே நிலை தொடர்ந்தால், தேசத் தந்தை என்ற இடத்திலிருந்து அண்ணல் காந்தியை நீக்கி, அவரின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாவர்கரை தேசத் தந்தையாக மாற்றிவிடுவார்கள்" எனக் கூறியுள்ளார்.

  • Sir @rajnathsingh you said that Savarkar’s grovelling mercy petitions were on Gandhi’s advise.

    1. Here’s the letter to Savarkar from Gandhi. No mention of petition to British begging for leniency, mercy & promising to be a faithful servant of the crown. 1/n pic.twitter.com/5asdmBVqss

    — Asaduddin Owaisi (@asadowaisi) October 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சீதாராம் யெச்சூரியின் எதிர்வினை

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், வரலாற்றை முட்டாள் தனமாக திருத்தி எழுதுகிறார்கள். 1911, 1913 ஆகிய ஆண்டுகளில் சாவர்கர் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளார். அண்ணல் காந்தியோ 1915ஆம் ஆண்டுதான் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்கத் தொடங்குகிறார்.

  • Petition of convict VD Savarkar(Convict No 32778), 14 Nov, 1913.
    "Therefore if the government in their manifold beneficence and mercy release me I for one cannot but be the staunchest advocate of constitutional progress & loyalty to the English government ......... ." pic.twitter.com/TrOsVXJnAS

    — Sitaram Yechury (@SitaramYechury) October 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுபோன்ற போலி வரலாற்றை யாரும் நம்பமாட்டார்கள். விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என்பதே உண்மை. அவர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்தே செயல்பட்டனர்" என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: நெடுமுடி வேணு குறித்து நினைவோடையை பகிர்ந்த மம்முட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.