ETV Bharat / bharat

சீனாவின் சவாலை சமாளிக்க இலங்கை இந்தியாவிடம் ஆதரவு - முன்னாள் இந்திய தூதர் பார்த்தசாரதி தகவல்

இலங்கை சீன நாட்டின் சவாலை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் ஆதரவை நாடி உள்ளதாக இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

சீனாவின் சவாலை சமாளிக்க இலங்கை இந்தியாவிடம் தஞ்சம் - முன்னாள் தூதர் பார்த்தசாரதி தகவல்

author img

By

Published : Jul 21, 2023, 6:52 AM IST

Updated : Jul 21, 2023, 9:17 AM IST

டெல்லி: தீவு நாடான இலங்கை, சீன நாட்டின் சவாலை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் ஆதரவை நாடி உள்ளதாக இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ஜி.பார்த்தசாரதி தெரிவித்து உள்ளார். இலங்கையைப் போன்று, தங்கள் நாடும் இந்தியாவிடம் இருந்து ஏதேனும் உதவியைப் பெற்றால், நாடு அழிந்து விடும் என்று அண்டை நாடான பாகிஸ்தான் நினைப்பதாக பார்த்தசாரதி குறிப்பிட்டு உள்ளார். மேலும், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, அரசு முறைப் பயணமாக இந்தியா வந்து உள்ள நிலையில், அவரது இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மற்றும் பிரதமர் ராஜீவ் காந்தி உடன் (1985-90) பிரதமர் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளர் உட்பட பல முக்கிய பதவிகளில் பணியாற்றிய ஜி. பார்த்தசாரதி ஈடிவி பாரத் ஊடகத்திற்கு, பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார். இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் உதவி கேட்காதது குறித்தும், அவர் நம்மிடம் தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

இலங்கைக்கு ஏற்பட்ட நிதிநெருக்கடியில் இருந்து காத்துக்கொள்ள, இந்தியாவிடம் உதவி கேட்டதைப் போல், அண்டை நாடான பாகிஸ்தான் கேட்டு இருந்தால், அதற்கு இந்தியாவின் செயல்பாடு எவ்வாறு இருந்திருக்க்கும் என்ற கேள்விக்கு, தான் ஆறு ஆண்டுகளாக அங்கு (பாகிஸ்தானில்) வசித்து வருவதாகவும், "இந்தியாவிடம் உதவி கேட்பதை விட இறப்பதே மேல்" என்று, பாகிஸ்தான் நினைப்பதாக, பார்த்தசாரதி குறிப்பிட்டு உள்ளார்.

"இந்தியாவிடம் உதவி கேட்டால், பாகிஸ்தான் நாட்டின், அதிகாரமிக்க அமைப்பினர், குறிப்பாக இராணுவத்தினர் தங்கள் இருப்பையே இழிவாக உணருவார்கள்," என்று அவர் தெரிவித்து உள்ளார். பார்த்தசாரதி 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இந்திய ஹை கமிஷனர் ஆகவும், 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போதும் அங்கு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"எனக்கு பாகிஸ்தானில் நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்கள் இந்தியாவிடம் உதவி கேட்பதை விட அவர்கள் இறப்பதையே விரும்புவார்கள் என்று பாகிஸ்தான் அரசாங்கம் நம்புகிறது. அதுதான் அவர்களின் உணர்வின் ஆழம் ஆகும். . அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பயங்கரவாதத்தின் நிழலில் இருந்து குளிர் காயலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. இலங்கையைப் போல, .பாகிஸ்தான் நாடும் முற்றிலும் உடைந்துவிட்டது. பாகிஸ்தான் நிர்வாகம், ஸ்தாபனங்கள், சர்வதேச நாணய நிதியம், சீனா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்து உள்ளன. ஆனால், பாகிஸ்தான் மீது, சீனா பாராமுகமாகவே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் இராணுவத்தில் உள்ள பெரும்பாலான ஆயுதங்கள், சீனா வழங்கியது ஆகும். அவர்களின் அணு ஆயுதங்கள், அவற்றின் ஏவுகணைகள் கூட சீன வடிவமைப்பில் தான் உள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருக்க சீனாவுக்கு பாகிஸ்தான் ஒரு வசதியான கருவியாக விளங்குவதாக, பார்த்தசாரதி குறிப்பிட்டு உள்ளார்.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இந்தியாவிற்கு பயணப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவின் அறிவுரைகளை முன்னெப்போதையும் விட இலங்கை அரசு, மிக தீவிரமாக நாடும் என்று எதிர்பார்க்கப்படுவது "குறிப்பிடத்தக்கது" பார்த்தசாரதி குறிப்பிட்டு உள்ளார். இந்த பயணத்தின் போது, "ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரம் பற்றி விவாதிப்பார், நிச்சயமாக இந்தியாவும் கடன் வரிசையைத் திறந்து வைத்து உள்ளது. .அதிபர் ரணில் ஒரு பழைய அரசியல்வாதி, நாங்கள் பல ஆண்டுகளாக மிகவும் முதிர்ச்சியடைந்த மற்றும் சமநிலையுடன், இணைந்து கையாண்டு உள்ளோம், மேலும் அவரது இந்த செயல்முறையை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதுதான்" விக்கிரமசிங்க இருக்கும் வரை, "ஒரு நிலையான நகர்வு இருக்கும்" என்று என்று பார்த்தசாரதி தெரிவித்து உள்ளார்.

"இந்தியாவை பாதிக்கும் எந்தவொரு விஷயத்திலும் சீனாவின் நகர்வு குறித்து இலங்கை மிகவும் கவனமாக இருக்கும். இந்த விவகாரத்தில், இலங்கை பாடம் கற்றுக்கொண்டதாக நினைப்பதாக" என்று அவர் தெரிவித்து உள்ளார். 1983-84ஆம் ஆண்டில், இந்திரா காந்தி, இலங்கை நாட்டிற்கு, தனது தனிப்பட்ட தூதராக தன்னை நியமித்தபோது, இலங்கையில் சிங்கள-தமிழ் மோதலைத் தீர்க்க முயன்றதாக பார்த்தசாரதி குறிப்பிட்டு உள்ளார்.

புவிசார் அரசியலில், இந்தியா ஜப்பானுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது. சீனா, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் எதிரானது, இலங்கைக்கு சீனா, உதவிக்கரம் நீட்டு உள்ளதால், அங்கு அது வலிமை வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் ‘உதவி’ செய்தால், அந்த உதவியை புறந்தள்ள முடியாது, என்று சீனாவிடம் சொல்லும் நிலையில்,.இலங்கை தற்போது உள்ளது.

சமீப காலமாக, இலங்கை மேலும் மேலும் சீனர்களின் கரங்களுக்குள் நகர்ந்து வருவதாகவும், குறிப்பாக கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை போன்ற துறைமுகங்களை சீனர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது அது தமக்கு கவலையை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்,.

மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக, ஜெய்சங்கர் இலங்கையில் இருந்தபோது இந்த முயற்சிகள் உண்மையில் அதிகரித்தன. இலங்கையின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தபோது, சீனா ஒன்றும் செய்யாமல் இருந்த நிலையில், இந்தியா உதவிக்கரம் நீட்டி இருந்தது. அவர்களுக்குத் தேவையானது துறைமுகங்கள், அவர்களுக்கு அதிக வட்டிக்கு கடன்களை வழங்குவது உள்ளிட்ட உதவிகளை, இந்தியா வழங்கி இருந்தது. அங்கு, நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அவர்கள் இந்தியாவுக்கு வந்தனர், பொருளாதாரம் சரிந்து, கலவரங்களால் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்த நிலையில், பிரதமர் மோடி மிகவும் சாதகமாக பதிலளித்ததாக ,பார்த்தசாரதி குறிப்பிட்டு உள்ளார்.

இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது, மேலும் இலங்கைக்கு நிதியுதவி வழங்க. , வாஷிங்டனில், குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம், இந்தியா வலியுறுத்தி உள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் முழுவதுமாக சீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, அது சீனாவிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. உண்மை இதுபோன்ற சம்பவம் அங்கு மீண்டும் நடைபெறுவதை இந்தியா விரும்பவில்லை என்று பார்த்தசாரதி தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை தந்து உள்ளார். அதிபராக அவர் பொறுப்புஏற்ற பிறகு அவர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறையாகும். விக்கிரமசிங்க தனது பயணத்தின் போது, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, பிரதமர் மற்றும் பிற உயரதிகாரிகளுடன் பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

இந்தியாவின் நெய்பர்ஹுட் ஃபர்ஸ்ட் கொள்கை மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கிரமசிங்கேவின் இந்த பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தும் மற்றும் மேம்பட்ட இணைப்பு மற்றும் துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராயும். இலங்கையில் உள்ள மக்கள் சோர்வடைந்து இருப்பதாகவும், சீனாவின் மீது அதிருப்தி நிலவுவதாகவும், அதனால், இந்தியா அதைச் சாதகமாக்கிக் கொண்டதாக, பார்த்தசாரதி தெரிவித்து உள்ளார்.

IMF அமைப்பில் இருந்து இலங்கையின் உதவியைப் பெறுவதைத் தவிர, திட்டங்களை வழங்குவதற்கும் நாங்கள் முன்னேறியுள்ளோம், அது வரும் மாதங்களில் பின்பற்றப்பட உள்ளதாக, பார்த்தசாரதி குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: Manipur Video: இன்னும் இதுபோன்ற வீடியோக்கள் நிறைய வரும் - எம்பி அதிர்ச்சி தகவல்!

Last Updated : Jul 21, 2023, 9:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.