பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருவதால், அங்குவரும் மற்ற மாநிலத்தவருக்கு பஞ்சாப் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பஞ்சாப் மாநிலத்திற்கு வருகை தரும் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நெகட்டிவ் என சான்று வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் அம்மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் இம்மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்காக சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பாதிப்பு பரவும் குறியீடான 'RO' ஒரு விழுக்காடுக்கும் மேலாக உள்ளது.
தற்போதைய எண்ணிக்கை அடுத்த 64 நாள்களில் இரட்டிப்பாகும் என கேம்பிரிட்ஜ் பல்கலைகழக ஆய்வு தெரிவிக்கிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வருகை கட்டுப்பாட்டை பஞ்சாப் அரசு விதித்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் முதல் ட்ரோன் தடயவியல் ஆய்வு மையம் திறப்பு