ஹைதராபாத்: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பெருமையாக சாதனை படைத்துள்ளது சந்திரயான்-3. இந்தியா மட்டுமின்றி உலகமே உற்றுநோக்கி காத்திருந்த தருணம் இது தான்., நிலவில் இந்தியா கால்பதித்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 வின் கடைசி நிமிட தோல்வி அனைவரின் கண்களை கலங்கச் செய்த நிலையில். பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், துகழாய் எழுந்த திட்டமே சந்திரயான் 3.
சந்திரயான் 3 கொண்டாடப்படுவதற்கான அவசியம், என்னதான் பல வளர்ச்சி பெற்ற நாடுகள் அறிவியல் உலகில் சிறந்து விளங்கினாலும், இதுவரை எந்த நாடும் முன்னெடுக்காத திட்டத்தை இந்தியா திட்டமிட்டு, இன்று அதனை நிகழ்த்தி முடித்தும் காட்டியுள்ளது.
நிலவு குறித்த தரவுகளை வெளிகொணர கொண்டு வரப்பட்ட திட்டமே சந்திரயான் திட்டம். நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமை பேசும் நாடுகள் கூட இன்றளவிலும் செல்ல முடியாத பாதையாக உள்ளது நிலவின் தென் துருவ பகுதி. ஏன் இன்னும் ஒரு படி மேல் போய் பார்த்தால், நிலவில் தண்ணீர் தன்மை இருப்பதை கண்டறிந்ததும் சந்திரயான் 1 திட்டம் மூலம் தான். இப்படி அனைத்து அசாதாரணமான சூழலையும் வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது இந்தியா.
கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எம்எல்வி 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்த பட்டது. இந்த திட்டம் முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே தயார் செய்யப்பட்டது இதன் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு போட்டியாக ரஷ்யாவின் லூனா 25(Luna 25) விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் முதலில் தரையிரங்கும் ராக்கெட் எது என இரு நாடுகளுக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், கடைசி நிமிடத்தில் ரஷ்யாவின் லூனா 25 கடைசி நிமிடங்களில், ராக்கெட் மற்றும் தகவல் மையத்தின் தகவல்கள் துண்டிக்கப்பட்டு தோல்வியை தலுவியது.
இதனைத் தொடர்ந்து நிலவின் தென் துருவ பகுதியில் தரையிரங்கும் முதல் நாடு என்ற வெற்றியை தன்வசப்படுத்தி இருந்தாலும், கடைசி நிமிடங்கள் வரை விஞ்ஞானிகள், அதிகாரிகள், நாட்டு மக்கள் என அனைவரையும் பதைபதைக்க செய்தது. தொடர்ந்து 10 கட்டங்களாக நிகழ்த்தப்பட்ட இந்த திட்டம், கடைசி திக் திக் நிமிடங்களை கடந்து நிலவின் தரைப்பகுதியில் செலுத்தப்பட்டு, வரலாற்றில் அழியா புகழாக தன் வெற்றியை பதித்துள்ளது. சந்திரயான் 3-யின் இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் தலை நிமிரச் செய்துள்ளது.
இதையும் படிங்க: India on Moon: நிலவைத் தொட்டது சந்திரயான் 3 லேண்டர் விக்ரம்!