திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேந்த ஆனந்த வள்ளி என்பவர் அம்மாவட்டத்தின் தலவூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளராக கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவரது கணவர் மோகனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
நடந்து முடிந்த அம்மாநில உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலவூர் தனித்தொகுதியில் போட்டியிட்ட ஆனந்தவள்ளி, 654 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
இதையடுத்து, அவர் தலவூர் பஞ்சாயத்து தலைவராக விரைவில் பதவியேற்கவுள்ளார். தூய்மைப் பணியாளராக இருந்து தற்போது அதே பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆனந்தவள்ளி பஞ்சாயத்து தலைவராக பதவியேற்கவுள்ள சம்பவம் பொதுமக்களை நெகிழ வைத்துள்ளது. அவரது இந்த வெற்றியைக் கொண்டாடி வரும் அவரது குடும்பத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: செயலி மூலம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தும் கும்பல்!