டெல்லி : ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் கண்கவர் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இந்நிலையில், அடுத்த ஆண்டு குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் பாஸ்டீல் டே அணிவகுப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரான்ஸ் அதிபர் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பாஸ்டீல் டே அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து இந்தியா - பிரான்ஸ் இடையிலான 25வது ஆண்டு இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அண்மையில் இந்தியா - பிரான்ஸ் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் முத்தரப்பு ராணுவ ஆலோசனைக் கூட்டத்தில் இருநாடுகளின் பாதுகாப்பு படைகளை சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பைடன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி இந்தியா தலைமையில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்து கொள்வார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், குவாட் உச்சி மாநாட்டின் தேதி தள்ளிப்போனது. இதையடுத்து குடியரசுத் தின விழாவில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்து கொள்வது ஏறக்குறைய சந்தேகத்திற்குள்ளானது.
இதையும் படிங்க : 1964ல் தனுஷ்கோடியில் நடந்தது என்ன? சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை..!