பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது
மன்னராட்சியின் கீழ் இருந்த பிரான்ஸ் நாட்டில், பாரிஸ் நகரில் உள்ள பஸ்தி எனும் சிறைச்சாலையில் 1789ஆம் ஆண்டு மக்கள் புரட்சி வெடித்தது. இதன் மூலம், அந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மன்னராட்சி தூக்கி எறியப்பட்டதை அடுத்து பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று பிரெஞ்சு தேசிய தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னம் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி புதுச்சேரி பிரெஞ்ச் துணைத் தூதர் லிசே டல்போட் பரே, துணை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆகியோர் அங்குள்ள போர் வீரர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாட்டு கொடிகளும் ஏற்றப்பட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
இதையும் படிங்க: விமான சேவைகள் 136 ஆக அதிகரிப்பு