டெல்லி: பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் அதிகாரப்பூர்வ மூன்று நாள்கள் அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜீன்-யவ்ஸ் லு டிரையன் ஆகியோர் இரு தரப்பு ஒப்பந்தம், உடன்பாடுகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கைகள் குறித்து பேசுவார்கள்” எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காலநிலை மாறுபாடுகள் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடமும் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியா- பிரான்ஸ் இடையே 1998ஆம் தூதரக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜீன்-யவ்ஸ் லு டிரையன் வருகையின் போது, பாதுகாப்பு, வர்த்தகம், காலநிலை மாறுபாடு, குடியுரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்படுகின்றன.
மேலும், அண்மையில் இந்தியாவுக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் மேற்கொண்ட வருகைகள் உலகளாவிய மறுசீரமைப்பு நடைபெற்று வருவதை பிரதிபலிக்கிறது.
மேற்கு நாடுகள் இந்தியாவை சீனாவுக்கு எதிரான ஒரு அரணாக பார்க்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, பஹ்ரைன் இன்று பிரான்ஸ் என உயர் அலுவலர்கள் இந்தியா நோக்கி வருவது நாட்டின் இராஜதந்திரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை காட்டுகின்றன.