ETV Bharat / bharat

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் - இந்த சலுகை இன்றுமுதல் 75 நாட்களுக்கு மட்டுமே! - பூஸ்டர் தடுப்பூசி இலவசம்

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

booster dose  Free Covid booster dose  Free Covid booster dose for all adults  பூஸ்டர் தடுப்பூசி  பூஸ்டர் தடுப்பூசி இலவசம்  18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம்
பூஸ்டர் தடுப்பூசி
author img

By

Published : Jul 15, 2022, 3:12 PM IST

Updated : Jul 15, 2022, 8:03 PM IST

டெல்லி: நாடு முழுவதும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு அனுமதியளித்த மத்திய அரசு, அவர்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே செலுத்த முடிவுசெய்துள்ளது.

மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு விடுதலைப்பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று (ஜூலை 15) முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’’ என்றார்.

இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் இதுவரை 199.12 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,15,068 டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதனைத் தவிர 2 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு பயன்படும் மென்பொருள் - சென்னை ஐஐடி வடிவமைப்பு

Last Updated : Jul 15, 2022, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.