நெல்லூர்( ஆந்திரப் பிரதேசம்): நெல்லூர் மாவட்டத்திலுள்ள பெரரெட்டிப் பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் வேணுகோபால். இவருக்கு இரட்டை மகள்கள் உண்டு. இந்நிலையில், நேற்று(ஜூன் 15) இவர் தனது வீட்டில் தன் 4 வயது மகளை வைத்து ஓர் விநோத பூஜை செய்துள்ளார்.
அந்தப் பூஜையில், குங்குமத்தை எடுத்து தனது மகளின் வாயில் வைத்து அடைத்துள்ளார், வேணுகோபால். இதனால் மூச்சுதிணறியதால் கதறிய சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, வேணுகோபால் காவல் துறையிடம் கூறுகையில், தனது வியாபாரம் சில தீய சக்திகளால் பாதிக்கப்படுவதாகவும், அந்த தீய சக்திகளை விரட்டவே தான் இந்த பூஜை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இவர் ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: Thalapathy 67: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் சமந்தா..?