டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புவி அறிவியல், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஜிதேந்திர சிங் அறிக்கை மூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகா வாட் திறனுடைய 4 அலகுகளின் கட்டுமானம் 2027ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும்.
தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகா வாட் திறனுடைய ஒன்றாவது மற்றும் இரண்டாவது அலகுகளில் உற்பத்தி நடைபெற்று வருவகிறது. இந்த பணிகள் நிறைவடையும் போது, 2027ஆம் ஆண்டுக்குள் 6,000 மெகா வாட் முழு உற்பத்தி திறனை கூடங்குளம் அணுமின் நிலையம் அடையும். தென்னிந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் (கூடங்குளம் அணுமின் நிலையம் உட்பட) மின் அமைச்சகத்தால் (MoP) பல்வேறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "குளிர்கால கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விவாதிக்க வேண்டும்" - எம்.பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை!