மும்பை: மும்பையில் நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. குர்லாவில் உள்ள நாயக் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மும்பை குர்லாவில் உள்ள நாயக் நகரில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.இடிபாடுகளில் 20-25 பேர் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மீட்புக்குழுவால் இதுவரை 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறுகையில், ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை விரைவாக மீட்பதே முக்கியமான வேலை என அவர் கூறினார். இந்த விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அங்கு இருந்த நான்கு கட்டடங்களுக்கும் மும்பை மாநகராட்சி சார்பில் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. எனினும் அந்த இடத்தை காலி செய்யாமல் குடியிரப்புவாசிகள் அங்கு வசித்த வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:அரசுப்பேருந்து மோதி விபத்து: கட்டுமானத்தொழிலாளி உயிரிழப்பு!