மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் சாமுண்டிபுரம் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள வீட்டின் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட வீட்டினை திறந்து பார்த்த போது போலீசார், நான்கு பேர் சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: அசாமில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதி கொடூரமாக கொலை.. போலீஸ் தீவிர விசாரணை!
பின்னர், உயிரிழந்தவர்கள் யார் யார் என்ற விபரங்களை காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதன்படி மகாதேவ சுவாமி (48) அவரது மனைவி அனிதா (35) இவர்களின் 17 மற்றும் 15 வயது மகள்கள் என்பது தெரியவந்தது. மேலும் மகாதேவ சுவாமியின் உடன் வீட்டின் ஹால் பகுதியிலும் அவரது மனைவியின் உடல் நாற்காலியிலும் மூத்த மகளின் உடல் தூக்கில் தொங்கிய நிலையிலும், இளைய மகளின் உடல் அறை ஒன்றின் உள்ளே இருந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நான்கு நபர்களில் இருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: 6 கட்டிவிட்டு 45 தடுப்பணைகளுக்கு கணக்கு.. ரூ.30 லட்சம் சுருட்டிய அதிகாரிகள்.. பெரம்பலூரில் நடந்தது என்ன?
மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மைசூரு மாநகர காவல் ஆணையர் ரமேஷ் பானோத், துணை காவல் ஆணையர்கள் முத்துராஜ் மற்றும் ஜாஹ்னவி ஆகியோர் ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து கே.ஆர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்ட தகவலின் படி, மகாதேவ சுவாமி ஆர்.எம்.சி மார்கெட்டில் முகவராக உள்ளதாகவும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் மைசூரு பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூட்டு பயிற்சியின் போது விமான விபத்து - அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த 3 பேர் பலி!