ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு - 4 வீரர்கள் வீரமரணம்!

Jammu and Kashmir Rajouri encounter : ஜம்மு - காஷ்மீரின் ரஜோரியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உள்பட 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Jammu and Kashmir
Jammu and Kashmir
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 8:30 PM IST

ராஜோரி : ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாஜி மால் காடுகளில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தின் சிறப்புப் படையினரும், காவல் துறையினரும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

  • Four Army personnel including two officers & two jawans have lost their lives in an ongoing encounter with terrorists in Rajouri area of J&K: 16 Corps sources

    Four Army personnel including two officers and two jawans have lost their lives in an ongoing encounter with terrorists… pic.twitter.com/pHRKshYtqz

    — ANI (@ANI) November 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பிர் பஞ்சால் வனப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து என்கவுன்டர்கள் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு படையினருக்கும் இந்த பகுதி கடும் சவால் அளிக்கக் கூடிய இடமாக காணப்படுகிறது.

பயங்கரவாதிகள் அடர்ந்த காடுகளை பயன்படுத்தி தங்கள் நிலைகளை மறைத்து, நிலப்பரப்பை பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் துரோக மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் அல்பைன் காடுகளை உள்ளிட்ட இடங்களை பயன்படுத்தி தங்கள் நிலைகளை மறைத்தும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம், ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் வெடித்து உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு அதிகாரிகள் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து இந்திய ராணுவத்தின் சிறப்பு படையினர், ராஷ்டிரிய ரைபிள்ஸ் உள்ளிட்ட அதிரடி படையினர் சம்பவ இடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியா - கனடா இடையே மீண்டும் இ-விசா சேவை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.