பராகர்(ஒடிஷா): ஒடிஷா மாநிலம், பராகர் மாவட்டம், ஜாண்டோல் என்ற கிராமத்தைச்சேர்ந்த மெஹர் என்பவரது வீடு கடந்த இரண்டு நாட்களாக உள்பக்கமாக பூட்டியிருந்தது. அவரது குடும்பத்தினர் யாரும் வெளியில் நடமாடவில்லை.
இந்த நிலையில், நேற்று(அக்.30) மெஹரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டினுள் சிதைந்த நிலையில் நான்கு உடல்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பிறகு வீட்டிற்குச் சீல் வைக்கப்பட்டது. இது மெஹர் மற்றும் அவர் குடும்பத்தினரின் உடல்களாக இருக்கலாம் என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காதலனை விஷம் வைத்துக்கொன்ற காதலி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!