மும்பை: அதிகாலையில் பாந்திரா - ஓர்லி கடல் ஆகியவற்றை இணைக்கும் சாலையில் அதிவேகமாகச் சென்ற 4 கார்களும் ஒரு ஆம்புலன்ஸும் ஒன்றுடன் மோதியதில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழக்க 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். காயமடைந்த பலரின் நிலை மிக மோசமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பாந்திரா - ஓர்லி சாலை தற்போது போக்குவரத்துக்கு அனுமதியின்றி மூடப்பட்டுள்ளது.