ETV Bharat / bharat

ஆற்றில் மணல் அள்ள தோண்டப்பட்ட குழியில் விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழப்பு - கெவ்ரை தாலுகா

மகாராஷ்டிராவில் ஆற்று மணலை கொள்ளையடிக்கும் கும்பல் தோண்டிவைத்திருந்த குழியில் விழுந்து நான்கு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 சிறுவர்கள் உயிரிழப்பு
4 சிறுவர்கள் உயிரிழப்பு
author img

By

Published : Feb 7, 2022, 7:18 AM IST

பீத்: மகாராஷ்டிரா மாநிலம் பீத் மாவட்டத்தில் உள்ள கெவ்ரை தாலுகாவிற்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆற்று மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் ஆற்று மணல் அள்ளும் கும்பல் தோண்டி வைத்திருந்த குழியில் விழுந்து நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பப்லு குனாஜி வாக்டே, கணேஷ் பாபுராவ் இன்கார், ஆகாஷ் ராம் சொனவான்னே, அமொல் சஞ்சய் ஆகிய நான்கு சிறுவர்களும் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

ஆற்று மணல் கொள்ளையர்கள் இப்பகுதியில் ஆற்றும் படுகைகளில் 20 அடி வரையிலான குழிகள் வரை தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து வட்டாட்சியரிடமும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமும் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர்.

இந்நிலையில், சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சிறுவர்களின் உடல்களை வாங்கப்போவதில்லை எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.