அமராவதி: 72 மணிநேரத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தலைமைச் செயலக ஊழியர்கள் நால்வர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் தரத்தில் உள்ள அலுவலர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அந்த நேரத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர். இதன் தொடர்ச்சியாக தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
இவ்வேளையில், மாநிலத் தலைமைச் செயலக ஊழியர்களும் தொடர்ந்து தொற்று பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். கடந்த 72 மணிநேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட தலைமைச் செயலக ஊழியர்கள் நால்வர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் நேற்று (ஏப்ரல் 18) ஒருநாள் மட்டும் கரோனாவால் 6,582 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மொத்தம் 7,410 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.