லக்னோ : உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் (89) சனிக்கிழமை (ஆக.21) காலமானார்.
வயது மூப்பு மற்றும் பல்வேறு நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதியுற்ற கல்யாண் சிங்குக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இன்று (ஆக.21) கல்யாண் சிங் காலமானார்.
முன்னதாக நேற்று கல்யாண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்கு நேரில் சென்று கல்யாண் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
கல்யாண் சிங், உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் மட்டுமின்றி ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அயோத்தி ராம ஜென்ம பூமி போராட்டம் வலுப்பெற்றபோது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இவர்தான் இருந்தார்.
அப்போதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதற்காக பல வழக்குகளை சந்தித்த கல்யாண் சிங், முதலமைச்சர் பதவியையும் இழந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 'அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் என் கனவு நிறைவேறியது' - கல்யாண் சிங்