ETV Bharat / bharat

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திரா பாண்டே நியமனம்! - சுஷில் சந்திரா

புதிய இந்திய தேர்தல் ஆணையராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அலுவலர் அனூப் சந்திரா பாண்டே (62) நேற்று (ஜூன் 8) நியமிக்கப்பட்டுள்ளார்.

அனூப் சந்திரா பாண்டே, New Election commissioner , புதிய  தேர்தல் ஆணையர்,
Former UP-cadre bureaucrat Anup Chandra Pandey appointed as EC
author img

By

Published : Jun 9, 2021, 11:09 AM IST

டெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த சுனில் அரோராவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நிறைவடைந்தது. அதனடிப்படையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார்.

புதிய தேர்தல் ஆணையாளர்

இதனால், மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணைய குழுவில் ஒரு காலியிடம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அலுவலரான அனூப் சந்திரா பாண்டே புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சுஷில் சந்திரா, ராஜிவ் குமார் உள்ளடக்கிய தேர்தல் ஆணைய குழுவில், தற்போது அனூப் சந்திரா பாண்டே இணைந்துள்ளார்.

அனூப் சந்திரா பாண்டே, New Election commissioner , புதிய  தேர்தல் ஆணையர்,
அனூப் சந்திரா பாண்டே அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் முகப்பு

இப்பதவிக்கு வயது வரம்பு 65 என்பதால், 62 வயதான அனூப் சந்திரா, 2024ஆம் ஆண்டு வரை பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையாளரான சுஷில் சந்திரா அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளதால், அனூப் சந்திரா அடுத்த தலைமை தேர்தல் ஆணையாராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

உ.பி தேர்தலுக்காக நியமனமா..?

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனூப் சந்திரா, அம்மாநில அரசுத் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இவர் தலைமையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2024ஆம் ஆண்டு வரை பணிபுரிவார் என்பதால், 2024 ஆண்டு மக்களவை தேர்தலும் இவர் தலைமையில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உத்தரப்பிரதேசத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து: 17 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.