புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டிற்கு முன்பு, கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கில், தேசியப் புலனாய்வு அமைப்பினர் வழக்குப் பதிவு செய்து, 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் தமிழர் விடுதலை படையைச் சார்ந்த திருச்செல்வம், தங்கராசு என்கிற தமிழரசு, கவியரசன், காளை லிங்கம், கார்த்திக், ஜான் மார்ட்டின் ஆகிய 6 பேர் மீது கடந்த 7 வருடமாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று (டிச.21) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் அனைவரும் இன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
குற்றவாளிகள் 6 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடியாததால், தீர்ப்பை வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக, முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் தெரிவித்தார்.
பின் மீண்டும் குற்றவாளிகளை காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை விடுவிக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்