பாரபங்கி : உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்.10ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்தத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த் பிரகாஷ் கௌதம் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இது அக்கட்சி உறுப்பினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனந்த் பிரகாஷ் கௌதம், தனது மகன் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் சீட் கேட்டார் என்றும் அதற்கு கட்சி தரப்பில் சாதகமான பதில் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான மற்றொரு தகவலில், “ஆனந்த் பிரகாஷ் கௌதம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பலமுறை நேரில் சந்திக்கவும், டெலிபோனிலும் தொடர்புக் கொண்டுள்ளார். ஆனால் பிரியங்கா காந்தி சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்.10ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இதையும் படிங்க : 5 மாநிலத் தேர்தல் பேரணிகளுக்கு ஜன.31 வரை தடை!