மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம் பிர் சிங் ஊழல் புகார் அளித்தார். இதே குற்றச்சாட்டை பரம் பிர் சிங்குடன் வேறு சில காவல் அலுவலர்களும் சுமத்தியிருந்தனர்.
இந்த புகாரின் மீது சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், அனில் தேஷ்முக் சிபிஐ அலுவலகத்தில் புதன்கிழமை (ஏப்.14) காலை 10 மணியளவில் ஆஜரானார்.
அப்போது அவரிடம் சில முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பதில் அளித்துள்ளார். முன்னதாக? தேஷ்முக் மீது சிங் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்துமாறு மும்பை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் சிபிஐக்கு உத்தரவிட்டது.
மும்பையில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்களில் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூல் செய்யுமாறு தேஷ்முக் கூறியதாக புகார் கடிதத்தில் சிங் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை தேஷ்முக் மறுத்துள்ளார்.
இதுவரை, சிபிஐ பரம் பிர் சிங், சச்சின் வேஸ், துணை போலீஸ் கமிஷனர் ராஜு புஜ்பால், உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாட்டீல், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ பாட்டீல் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் மகேஷ் ஷெட்டி ஆகியோரின் அறிக்கைகளையும் பதிவு செய்துள்ளார்.
இது தேஷ்முக்கின் தனிப்பட்ட உதவியாளர் குண்டன் ஷிண்டே மற்றும் தனிப்பட்ட செயலாளர் சஞ்சீவ் ஆகியோரையும் சிபிஐ அலுவலர்கள் ஏப்.11 விசாரித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.