ETV Bharat / bharat

முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்துரிரங்கனுக்கு மாரடைப்பு: சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வருகை!

இலங்கை பயனத்தின் போது முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. கஸ்துரிரங்கனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் சிறப்பு விமானத்தில் பெங்களூருக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் இஸ்ரோ தலைவருக்கு மாரடைப்பு
முன்னாள் இஸ்ரோ தலைவருக்கு மாரடைப்பு
author img

By

Published : Jul 10, 2023, 10:10 PM IST

பெங்களூரு : முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. கஸ்துரிரங்கனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இலங்கை சென்று உள்ள அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரை பெங்களூரு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் கஸ்தூரிரங்கன், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பணியாற்றினார்.

இவரது தலைமையின் கீழ் இஸ்ரோ பி.எஸ்.எல்.வி உள்ளிட்ட பல்வேறு ராக்கெடுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்றது முதல் பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் முக்கிய பொறுப்பு வகித்தார். தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவராகவும் இருந்தார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர், கர்நாடக அறிவுசார் ஆணையத்தின் தலைவர், 2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து உள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் 2009ஆம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் இயக்குநராகவும், முன்னாள் மத்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தவர் கஸ்துரிரங்கன்.

தற்போது ராஜஸ்தானின் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார். 82 வயதான கஸ்துரிரங்கனுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து உள்ளது. இந்நிலையில் இலங்கை சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை கொழும்புவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கஸ்துரிரங்கன் பெங்களூரு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் உள்ள நாராயண ஹ்ருத்யாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ள அவருக்கு நாராயண ஹெல்த் நிறுவனர் டாக்டர் தேவி ஷெட்டி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விண்வெளி விஞ்ஞானி ஸ்ரீ கஸ்தூரி ரங்கன் இலங்கையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வருந்துகிறேன். அவர் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: El Nino: கொதிக்கும் உலகம்; வெப்பநோய்களிலிருந்து தப்புவது எப்படி? 'எல் நினோ' விளைவு என்றால் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.