யமுனாநகர்: பாஜக முதுபெரும் தலைவரும், ஹரியானா மாநில முன்னாள் அமைச்சருமான கம்லா வர்மா காலமானார்.
பாஜக முதுபெரும் தலைவரான கம்லா வர்மா செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) திடீரென மூச்சுவிட சிரமப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றைய தினம் மாலை 7.30 மணியளவில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு கறும்பூஞ்சை பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
கம்லா வர்மாவின் மறைவுக்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், “கம்லா வர்மாவின் மறைவு மூலம் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
அடல் பிஹாரி வாஜ்பாய், எல்கே அத்வானி உள்ளிட்ட முதுபெரும் தலைவர்களுடன் பணியாற்றிய அனுபவம்மிக்கவர் கம்லா வர்மா. இவர், 1977ஆம் ஆண்டு முதல்முறையாக யமுனாநகரில் எம்எல்ஏ ஆக தேர்வானார். தொடர்ந்து 1977, 1987 மற்றும் 1996 ஆகிய காலக்கட்டங்களில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக மட்டுமே தேசியக் கட்சி, மற்றதெல்லாம் பிராந்திய கட்சி- ஜிதின் பிரசாதா!