கொடைக்கானல்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈகுவடார் நாட்டின் முன்னாள் அதிபர் ரோசாலியா அர்டியகா(Rosalia Arteaga) தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மாணவ மாணவிகள் முன்னிலையில் எதிர்கால கல்வி குறித்து உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ரஷ்யா தன்னுடைய அதிகார பலத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய அதிபர் புதின் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். உலக அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்.
போரில் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தும் பட்சத்தில் மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட நேரிடும். ரஷ்யாவும் உக்ரைனும் தங்களது பிரச்னைகளை அமைதியான முறையில் அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் போர் முடிவுக்கு வரும்'' என்றார்.
ரஷ்ய அதிபர் புதின், போரால் ஏற்படும் தங்கள் நாட்டு வீரர்களின் இழப்பைப் பற்றியாவது கவலை கொள்ள வேண்டும் என்றும், போரால் இரு நாடுகளில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உயிரிழப்பது மட்டுமே ஏற்படும். அதனைத் தவிர, யாருக்கும் ஒருபோதும் வெற்றி கிடைக்காது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:SBI: ரூ.40,000 சம்பளத்தில் வேலை.. அப்ளை பண்ண இன்றே கடைசி நாள்!