மும்பை : 1983ஆம் ஆண்டு கபில் தேவ் உலக கோப்பையை வென்றது மற்றும் 2011ஆம் ஆண்டு உலக கோப்பைக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் டோனி சிக்சர் அடித்தது ஆகிய இரண்டு தருணங்களை தான் இறப்பதற்குள் மீண்டும் ஒரு முறையாவது காண வேண்டும் என விரும்புவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
கடந்த 14ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உள்ளூரில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தம் அளித்தாலும், சென்னையில் நடைபெறும் கடைசி ஆட்டம் என்பதால் கேப்டன் டோனியைக் காண திரண்டனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை மண்ணில் வேறு ஐபிஎல் இல்லாததாலும், டோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் கிரிக்கெட் எனக் கூறப்படுவதாலும் திரளான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். மேலும் போட்டி முடிவடைந்ததும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக மைதானத்திற்குள் கேப்டன் டோனி உலா வந்தார்.
ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்து கொண்டு, மைதானத்தில் உலா வந்த டோனியை சட்டென மறித்த சுனில் கவாஸ்கர், சிறுது அளவும் தயக்கமின்றி தனது சட்டையில் ஆட்டோகிராஃப் போடுமாறு டோனியிடம் கோரினார். சுனில் கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராஃப் போட்ட கேப்டன் டோனி, அப்படியே அவரை ஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாகப் பரவியது. பேன்பாய் மொமன்ட் என சுனில் கவாஸ்கரை மெச்சும் வகையில் ரசிகர்கள் தொடர் கமெண்டுகளை பதிவிட்டு சமூகவலைதளத்தில் தெறிக்கவிட்டு வந்தனர். இந்த நிலையில், அந்த உணர்ச்சிப்பூர்வமான தருணம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மவுனம் திறந்து உள்ளார்.
அவர் கூறியதாவது, "சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன், நானும் ஒரு மறக்க முடியாத தருணத்தை உருவாக்க விரும்பினேன். அதனால் தான் ஆட்டோகிராஃப் வாங்க டோனி இருக்கும் இடத்தை நோக்கி ஓடினேன். ஏனென்றால் அதுதான் சேப்பாக்கத்தில் அவரின் கடைசிப் போட்டி.
நிச்சயமாக சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அப்படி தகுதி பெறும்பட்சத்தில் மீண்டும் அவர் வருவார். ஆனால் அந்நாள் அந்த தருணத்தை நான் கைவிட விரும்பவில்லை. நல்வாய்ப்பாக அங்கிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரிடம் மார்க்கர் பென் இருந்தது. இப்போதும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
-
For the fans..
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Of the fans..
By the fans..!#YellorukkumThanks #WhistlePodu #Yellove 🦁pic.twitter.com/n5D5yLdp3h
">For the fans..
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023
Of the fans..
By the fans..!#YellorukkumThanks #WhistlePodu #Yellove 🦁pic.twitter.com/n5D5yLdp3hFor the fans..
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023
Of the fans..
By the fans..!#YellorukkumThanks #WhistlePodu #Yellove 🦁pic.twitter.com/n5D5yLdp3h
நான் டோனியிடம் சென்று எனது சட்டையில் ஆட்டோகிராஃப் போடச் சொன்னேன். அவர் உடனே சம்மதித்து ஆட்டோகிராஃப் போட்டார். அது மிகவும் உணர்ச்சிமிக்க தருணமாக இருந்தது. இந்திய கிரிக்கெட்டுக்காக பல சாதனைகளை செய்த ஒருவரிடம் இருந்து ஆட்டோகிராஃப் பெறுவது மிகவும் உணர்ச்சிகரமானது.
நான் இறப்பதற்கு முன் ஒருமுறையாவது 1983ஆம் ஆண்டு கபில் தேவ் வென்ற உலக கோப்பையையும், 2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் டோனி அடித்த சிக்சரையும் மீண்டும் பார்க்க விரும்புகிறேன்" என உணர்ச்சிப் பொங்க சுனில் கவாஸ்கர் கூறினார்.
இதையும் படிங்க : அயன் பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள்கள் கடத்தல் - நைஜீரியா பயணி சிக்கியது எப்படி?