புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியின் நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாமிநாதன், செல்வகணபதி, தங்கவிக்ரமன் ஆகிய மூன்று பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், "புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கலைந்ததற்கு நாங்கள் தான் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். அது தவறு அதற்கு நாங்கள் காரணம் இல்லை இதுவரை காங்கிரஸ் கட்சி பல முறை தானாகவே கலைந்து உள்ளது.
மத்திய அரசு மிரட்டல் விடுத்து ஆட்சியை கலைத்து உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. கூட்டணி கட்சியான அதிமுக கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை.
இதில் மூன்று நியமன எம்எல்ஏக்கள் யாரும் இதுவரை ஓட்டுப்போட்டு ஆட்சியை நாங்கள் கலைக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்து உள்ள நிலையில், அவர்களே ஆட்சி கவிழும் நிலையை உருவாக்கி உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வாக்கெடுப்பிற்கு முன்பே புறமுதுகு காட்டி ஓடி உள்ளார். இவர் பொய் சொல்வதில் வல்லவர், அவர் சுயநலவாதி. அவர் முதலமைச்சராக இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவே இருந்தார்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு அறிமுகம்!