ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்சி லஹோட்டி காலமானார்! - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி என்ற ஆர்சி லஹோட்டி நேற்றிரவு (மார்ச் 23) காலமானார்.

R C Lahoti
R C Lahoti
author img

By

Published : Mar 24, 2022, 12:35 PM IST

டெல்லி : நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்சி லஹோட்டி புதன்கிழமை (மார்ச் 23) காலமானார். அவருக்கு வயது 81. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக லஹோட்டி 2004ஆம் ஆண்டு முதல் 2005ஆம் வரை பணியாற்றியிருந்தார்.

ஆர்சி லஹோட்டி : 1940ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பிறந்த ரமேஷ் சந்திர லஹோட்டி, வழக்குரைஞர் படிப்பை முடித்துக்கொண்டு 1962ஆம் ஆண்டு தொழில்முறை வழக்குரைஞராக பதிவு செய்துகொண்டார்.

இந்நிலையில் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார். இருப்பினும் 1978ஆம் ஆண்டு பொறுப்பை துறந்துவிட்டு, மீண்டும் வழக்குரைஞராக சட்டப் பணிக்கு திரும்பினார். தொடர்ந்து, 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

மன்மோகன் சிங் விருது : இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2004 ஜூன் 1ஆம் தேதி முதல் 2005 அக்.31ஆம் தேதி வரை பொறுப்பு வகித்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்ற லஹோட்டிக்கு 2006ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேசிய சட்ட தினத்தில் விருது வழங்கி கௌரவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் : லஹோட்டி சட்டம் மட்டுமின்றி கல்வி உள்ளிட்ட பணிகளிலும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். இந்நிலையில் லஹோட்டியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Anguished by the passing away of former CJI Shri RC Lahoti Ji. He will be remembered for his contributions to the judiciary and emphasis on ensuring speedy justice to the underprivileged. Condolences to his family and well-wishers. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) March 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி லஹோட்டியின் மறைவு வேதனை அளிக்கிறது. நீதித்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக அவர் என்றென்றும் நினைவுக் கூரப்படுவார். அவரின் உறவினர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உக்ரைன் போர்: சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி வாக்களிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.