வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ள வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா, நேற்று (செப்.3) அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் காலின் கால் (Colin Kahl) சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் குறித்தும், பாதுகாப்பு கூட்டாண்மை குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதில், குறிப்பாக இருநாடுகளுக்கிடையேயான அதி முக்கியத்துவம் வாய்ந்த சில விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த முறை, இப்பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது.
இம்முறை, பைடன் அதிபராக பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் அதிமுக்கிய பேச்சுவார்த்தை இதுவாகும். தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க இருநாட்டு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து வெள்ளை மாளிகையில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபினரை சந்தித்தார்.
இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தான், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை உள்பட பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: முன்னாள் அரசு ஊழியர்களைக் குறிவைக்கும் தாலிபான்கள்... மின்னஞ்சல் கணக்குகள் முடக்கிய கூகுள்!