ராஞ்சி: பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு தீவன ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர் 2017ஆம் ஆண்டு முதல் ராஞ்சியில் உள்ள சிறையில் இருந்துவருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து ராஞ்சி மருத்துவமனையிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் சிறுநீரகம் தற்போது 25 சதவீதம் வரை மட்டுமே செயலில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் உமேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ்வின் பிணை மனு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அவரது பிணை மனு மீதான விசாரணையை வருகிற 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: லாலு பிரசாத் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!