அகில இந்திய மேலாண்மை சங்கம் (AIMA) நிகழ்வில் தொழில்துறை தலைவர்களிடம் நேற்று (பிப். 20) பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “முதலீட்டை எளிதாக்க பெரும் நிறுவன வரி விகிதத்தை குறைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியாவில் தனியார் முதலீட்டாளர்களும் தனியார் தொழிற்துறையும் இணைந்து தற்போது செயல்படுவதை பார்க்க முடிகிறது.
மேலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதற்காக கட்டமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கட்டவிழ்த்துவிட்டு புதிய முதலீட்டைக் கொண்டுவர வேண்டும்” என இந்தியா இன்க் நிறுவனத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க...நிதி ஆயோக்: மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை