டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை 10 மணிக்கு பதிலளிக்கிறார்.
இன்றுடன் (சனிக்கிழமை) பட்ஜெட் கூட்டத்தொடரும் நாடாளுமன்றத்தில் நிறைவு பெறுகிறது. முன்னதாக நிர்மலா சீதாராமன், மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்து வெள்ளிக்கிழமை (பிப்.12) பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அவர் பேசியதுடன், அரசாங்கம் அவர்களின் கூட்டாளிகளுக்கு மட்டும் சாதகமாக செயல்பட்டுவருகிறது என்ற தவறான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பிவருகின்றனர்.
மத்திய அரசு ஏழை மக்களுக்கான அரசு. இவர்களுக்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சௌபாக்ய யோஜனா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாடு நீண்டகால வளர்ச்சியை நோக்கி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு தன்னம்பிக்கை இந்தியா) ஒரு கருவியாகும்” என்றார்.
நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: விவசாயிகளின் போராட்டம் அல்ல.. நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம்- ராகுல் காந்தி