வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழச்சி நவம்பர் 17ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டுவருகின்றனர். அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ளார். இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இன்று (டிசம்பர் 4) கட்டடக்கலை குறித்த கருத்தரங்கில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது நிர்மலா சீதாராமன் கூறுகையில், நாம் ஒவ்வொருவரும் ஒரு மொழி பேசலாம். நமது பண்பாடு வேறாக இருக்கலாம். இருப்பினும் அனைவரும் பாரதத் தாயின் மக்களே.
-
பிரதமர் நரேந்திர மோதி தமிழ் இலக்கிய கூற்றுகளை பல மேடைகளில் மேற்கோள் காட்டி வருகிறார் : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் #KasiTamilSangamam @narendramodi @nsitharaman @nsitharamanoffc @bhupro @airnews_Chennai @DDNewslive @KTSangamam @FinMinIndia @pibchennai pic.twitter.com/MatDhpnuls
— DD Podhigai News (@DDNewsChennai) December 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">பிரதமர் நரேந்திர மோதி தமிழ் இலக்கிய கூற்றுகளை பல மேடைகளில் மேற்கோள் காட்டி வருகிறார் : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் #KasiTamilSangamam @narendramodi @nsitharaman @nsitharamanoffc @bhupro @airnews_Chennai @DDNewslive @KTSangamam @FinMinIndia @pibchennai pic.twitter.com/MatDhpnuls
— DD Podhigai News (@DDNewsChennai) December 4, 2022பிரதமர் நரேந்திர மோதி தமிழ் இலக்கிய கூற்றுகளை பல மேடைகளில் மேற்கோள் காட்டி வருகிறார் : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் #KasiTamilSangamam @narendramodi @nsitharaman @nsitharamanoffc @bhupro @airnews_Chennai @DDNewslive @KTSangamam @FinMinIndia @pibchennai pic.twitter.com/MatDhpnuls
— DD Podhigai News (@DDNewsChennai) December 4, 2022
நமது மதங்கள் வேறாக இருந்தாலும், அடிப்படையில் நமது கலாச்சாரம் ஒன்றுதான். நம்பிக்கை ஒன்றுதான். நதிகளை மதிக்க வேண்டும். விலங்குகள், மரம், செடி, கொடிகள் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டும். அசையும் உயிர்களையும், அசைவற்ற உயிர்களைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும். இந்தப் பண்பாடுதான் நம்மை முக்கியமாக ஒற்றுமைப்படுத்துகிறது. காசி தமிழ் சங்கமம் போன்ற கூட்டங்களில், காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருப்பதை நாம் எடுத்துச் சொல்கிறோம். இரண்டு உயர்ந்த கல்வி மையங்களாக காஞ்சியும், காசியும் இருந்துள்ளன. பிரதமர் மோடி திருக்குறள், சங்க இலக்கியங்கள், புறநானூறு, அகநானூறு ஆகியவற்றை எடுத்து ஒவ்வொரு உலக சபையிலும் சொல்லி வருகிறார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சியில் ஆந்திரா முக்கியப் பங்காற்றுகிறது - திரௌபதி முர்மு