மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மகாராஷ்டிர மாநில சட்டசபை செயலாளர் ராஜேந்திர பகவத் அனைத்து எம்எல்ஏக்களுக்கும், கவர்னரின் உத்தரவின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் சிறப்பு அமர்வு கூட்டம் இன்று நடைபெறாது என்றும் அறிவித்தார்.
ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஜூன் 30ஆம் தேதி தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழககு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் தீர்ப்பிற்கு பின் முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே சமூக வலைதளங்களில் பொதுமக்களுடன் உரையாடினார். அதில் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, “அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத்தை தாராஷிவ் என்றும் அதிகாரப்பூர்வமாக மாற்றியதில் திருப்தி அடைகிறேன்” என்றார்.
இன்று உங்கள் முன்னிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார். மேலும் ஆதரவு அளித்த என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து ராஜ்பவன் சென்ற உத்தவ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து நாடு முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!