ETV Bharat / bharat

ஓய்ந்தது 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. ஆட்சியை இழக்கப் போவது யார்? கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்! - Five State Assembly Election Exit Poll

Election Exit Poll Results 2023: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை விரிவாக பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 5:40 PM IST

Updated : Nov 30, 2023, 7:07 PM IST

ஐதராபாத் : ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், இன்று (நவ. 30) தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மத்திய பிரதேசம் : 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படும் நிலையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக மற்றும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதைத் தொடர்ந்து பகுஜான் சமாஜ் கூட்டணி, ஆசாத் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஜனதா தள் உள்ளிட்ட கட்சிகளும் இம்முறை தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முக்கிய போட்டி காங்கிரஸ் - பாஜக இடையே நிலவுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 116):

பாஜககாங்கிரஸ்மற்றவை
CNN 112 113 05
janki Baat100 - 123 102 - 125 05
Republic118 - 130 97 - 10702
TV 9106 - 116113 - 121 06

ராஜஸ்தான் : 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்ததால், அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே, மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது.

ராஜஸ்தானை பொறுத்தவரை காங்கிரஸ் - பாஜக இடையே தான் போட்டியே. ஆட்சியை தக்கவைக்க அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் மீண்டும் ஆட்சியை பிடிக்க ராஜேந்திர சிங் ரத்தோர் தலைமையிலான பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இதைத் தொடர்ந்து பகுஜான் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியில் உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 101) :

பாஜககாங்கிரஸ்மற்றவை
CNN 1117414
janki Baat100 -122 62 - 85 14 - 15
TV9 90 - 100100 - 11005 - 15
NDTV100 - 122 62 - 85 14 - 15
ETG 108 - 12856 - 72 13 - 21
Axis my India 80 - 10086 - 106 ----

தெலங்கானா : தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை மாநிலம் தொடங்கியது முதல் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியில் உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகள் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் உள்ள நிலையில், நடப்பாண்டு தேர்தல் முடிவுகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களும் பி.ஆர்.எஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த முறை காங்கிரஸ் கட்சியின் கை சற்று ஓங்கலாம் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மாநிலத்தில் பி.ஆர்.எஸ் - காங்கிரஸ் இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. அதேநேரம் தேர்தல் வெற்றியில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் என கூறப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 60) :

பி.ஆர்.எஸ்காங்கிரஸ்ஏ.ஐ.எம்.ஐ.எம்பாஜகமற்றவை
CNN 48 56 0510---
janki Baat40 - 55 48 - 64 04 - 0707 - 1300
TV963 21 ---0530

சத்தீஸ்கர் : 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்புகள் அதிகம் காணப்பட்ட இடங்களில் கூட்ட இம்முறை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரை முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும், நாராயண சண்டல் தலைமையிலான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு பெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக பகுஜான் சமாஜ் கூட்டணி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 46):

பாஜககாங்கிரஸ்மற்றவை
CNN 40 4703
janki Baat 34 - 45 42 - 53 03
Axis my India 414504
India Today36 - 46 40 - 50 ---
TV9 30 - 40 46 - 56 03 - 05
Chanakya3357---

மிசோரம் : வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மிசோரம் மாநிலத்தில் முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி (Mizo National Front) என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிசோ தேசிய முன்னணி, பு லால்சவ்தா தலைமையிலான காங்கிரஸ், லால்துஹோமம் தலைமையிலான சோரம் மக்கள் இயக்கம் (Zoram People's Movement ) இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தேர்தல் போட்டியில் முன்னணியில் உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 21):

மிசோ தேசிய முன்னணிகாங்கிரஸ்பாஜகசோரம் மக்கள் இயக்கம்
janki Baat 10 - 14 05 - 090 - 215 - 25
India TV-CNX 14 - 18 08 - 10 0 - 212 - 16

Last Updated : Nov 30, 2023, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.