டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் கலாதுங்கி மாவட்டம் நனிதால் கிராமத்திலுள்ள கோடாபகா பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுமிகள் உள்பட ஐந்து பெண்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இரவு நேரத்தில் தங்கியிருப்பதை கிராம மக்கள் கண்டறிந்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களது தந்தை மதுபோதையில் தங்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வதால் அவரிடமிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியேறிதாகத் தெரிவித்தனர்.
பின்னர், கிராம மக்கள் இவர்கள் குறித்த தகவலினை காவல் துறையினருக்கு தெரிவித்தனர். இதையறிந்த காவல் துறைியினர் சிறுமிகளை மீட்டு ஆலோசனை நடத்த பெண்கள் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவரான அமித்தா லோகினியின் உதவியை நாடியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த வழக்கு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் தந்தையின் மீது புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அவர்களது தந்தையின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கை வருவாய் துறையினருக்கு மாற்றினர். புகாரில், தங்களது தந்தை, தங்களது தாயாரையும் மிகவும் துன்புறுத்திவருவதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து அமிதா லோகினி சிறுமிகளை நரி நிகேதனுக்கு அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.