ETV Bharat / bharat

இமாச்சலத்தில் நிலச்சரிவு... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு... - புதையுண்டவர்களை மீட்க முயற்சி

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

Etv Bharatஇமாச்சலத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 26, 2022, 6:57 PM IST

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சிர்மாவூர் மாவட்டத்தில் உள்ள நஹான் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், "இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டோம். 5 பேருடைய உடல்களை மீட்டோம். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அதன்படி பிரதீப் சிங் என்பவரது மனைவி மம்தா (27), அவர்களது குழந்தைகளான இஷிதா (8), அலிஷா (6) , ஐராங் (2), அகன்ஷிகா (7), துளசி ராம் ஆகியோர் உயிரிழந்தனர். பிரதீப் சிங் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.