ஜம்மு காஷ்மீரில் நேற்று இரு வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மண்டல காவல் தலைவர் தெரிவித்துள்ளார்.
குல்காம் பகுதியில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.
அதேபோல், புல்வாமா பகுதியில் நடைபெற்ற மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேற்கண்ட தகவலை ஜம்மு காஷ்மீர் மண்டல காவல் தலைவர் விஜய் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அங்கிருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டதாகவும் ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’தடுப்பூசியால் மீண்டும் பார்வை கிடைத்தது’ - மகாராஷ்டிராவில் பரவும் புரளி!