ETV Bharat / bharat

நக்சலைட் தடுப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் ஐ.இ.டி. குண்டு வெடித்து படுகாயம்... - CRPF Exam

நக்சலைட் தடுப்பு பணியில் ஈடுபட்டு போது ஐஇடி குண்டு வெடித்ததில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சிக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு
குண்டுவெடிப்பு
author img

By

Published : Jan 11, 2023, 10:29 PM IST

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம், சாய்பாஸா மாவட்டத்தை அடுத்த சார்ஜன்புரு வனத்தை ஒட்டிய பகுதியில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தேடுதல் வேட்டையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபட்டனர். டோன்டோ காவல் நிலைய எல்லைப் பகுதிக்குள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சோதனையில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக ஐ.இ.டி வகை குண்டு வெடித்து சிதறியது.

இதில் வீரர்கள் 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். படுகாயங்களுடன் தவித்த வீரர்களை மீட்டு அருகில் உள்ள சிகிச்சை மையத்தில், அனுமதித்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் ராஞ்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக வீரர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வீரர்களின் உடல் நிலை சீரான அளவில் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையை வீரர்கள் கடந்து விட்டதாகவும் ராணுவ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு.. ஐஏஎஸ், முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.