ETV Bharat / bharat

கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் கனமழைக்கு ஐந்து பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Aug 8, 2022, 5:40 PM IST

கர்நாடகாவில் 75 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 7 ஆயிரத்து 386 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Etv Bharatகர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் கனமழைக்கு  ஐந்து பேர் உயிரிழப்பு

பெங்களூரு(கர்நாடகா): கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த உயிரிழப்பு நடந்துள்ளது. ராமாநகரா மாவட்டத்தில் உள்ள மகதி தாலுகா அருகில் அமைந்துள்ள குடலுரு கிராஸ் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பிரவீன் என்ற 3 வயது ஆண் குழந்தையும், 4 வயது ஆண் குழந்தையும் விடாமல் பெய்த மழையில் மாட்டுக்கொட்டகை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் குழந்தைகளின் தாயார் பிட்டு மற்றும் மோனிஷா ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் இருவரும் நேபாள நாட்டைச்சேர்ந்தவர்கள். மகதி தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விஜயாபுரா தாலுகாவில் 65 வயதாகும் நந்தப்பா என்ற முதியவர் அவர் வளர்க்கும் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்வதை தடுப்பதற்காக காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்தார்.

ஹாசன் மாவட்டம், சன்னராயப்பட்டணாவில் உள்ள கல்லேசோமனஹள்ளியில் நடந்த மற்றுமொரு விபத்தில் ரங்கஷெட்டி (40) என்பவர் மீது, பாரிய மரம் விழுந்து உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட நபர் அவரது பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

தும்குரு மாவட்டம், பாவகடா தாலுகாவில் உள்ள பயதானூர் அருகே 38 வயது பெண்ணான தேவிரம்மா நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து SDRF(மாநில பேரிடர் மீட்புக் குழு) குழுவினர் மாலையில் தேவிரம்மாவின் உடலை மீட்டனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல ஆறுகள் நிரம்பி வழிகின்றன.

கர்நாடக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆணையர் ராஜன் கூறுகையில், ‘ஜூன் 1ஆம் தேதி முதல் 75 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 7,386 பேர் அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அதில் 11 முகாம்கள் செயல்படுகின்றன. அதில் 296 பேர் தங்கியுள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தப்பகுதிகளில் உள்ள பல குடும்பங்கள் தங்களது உறவினர்களின் குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் இதர மளிகைப்பொருட்கள் அடங்கிய உணவுப்பெட்டிகள் விநியோகிக்கப்படுகின்றன’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Video: கர்நாடகாவில் கட்டடம் கவிழ்ந்து விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.