ETV Bharat / bharat

குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் 5 பேருடைய சொத்துமதிப்பு ரூ.1200 கோடி - gujarat election result

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 5 பேருடைய சொத்துமதிப்பு ரூ.1200 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் 5 பேருடைய சொத்துமதிப்பு ரூ.1200 கோடி

author img

By

Published : Nov 29, 2022, 8:05 PM IST

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதல்கட்ட தேர்தல் பரப்புரை முடிவடைந்த நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 5 பேருடைய சொத்துமதிப்பு ரூ.1200 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், குஜராத்தில் 2ஆம் கட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் 93 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 75 பேர் ரூ. 1 கோடிக்கும் மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர். குறிப்பாக, 5 பேருடைய சொத்துமதிப்பு ரூ.1200 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயந்திபாய் சோமாபாய் படேலுக்கு ரூ.661 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அடுத்தபடியாக, சித்பூரின் பாஜக வேட்பாளர் பல்வந்த்சின்ஹ சந்தன்சின்ஹ ராஜ்புத்துக்கு ரூ. 343 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளன. அதேபோல விஜாப்பூரை சேர்ந்த வேட்பாளர் ராமன்பாய் டி.படேல் ரூ.95 கோடியும், தாஸ்குரோயை சேர்ந்த பாபுபாய் ஜம்னாதாஸ் படேல் ரூ.61 கோடியும், ஆனந்தைச் சேர்ந்த யோகேஷ் ஆர்.படேல் ரூ.46 கோடியும் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளனர்.

மறுப்புறம் காங்கிரஸ் வேட்பாளர்கள் 90 பேரில் 77 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.25 கோடியாக உள்ளது. குஜராத்தில் பாஜக கட்சியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 19.58 கோடியாகவும், காங்கிரஸ் கட்சியின் சொத்துமதிப்பு 7.61 கோடியாகவும், ஆம் ஆத்மி கட்சியின் சொத்துமதிப்பு 5.28 கோடியாகவும் உள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அஸ்ஸாம்-மேகாலயா எல்லை விவகாரம்... தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.