உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியில் உள்ள திரிசூல் என்ற மலைச் சிகரத்தில் ஏற இந்திய விமானப்படையைச் சேர்ந்த 20 வீரர்கள் சென்றுள்ளனர். இந்த மலையேற்ற குழுவில் பத்துபேர் பனிப்புயலில் சிக்கி காணாமல் போனதாக தகவல் வெளியானது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கர்னல் அமித் பிஸ்த் என்பவரின் தலைமையிலான குழு களமிறங்கியுள்ளது. இந்த மீட்பு பணியில் ராணுவம், விமானப்படை, பேரிடர் மீட்புக் குழு ஆகியவற்றின் வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இக்குழு இதுவரை ஐந்து பேரை மீட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஐவரை தேடும் பணியில் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் குழுவின் தலைவர் அமித் பிஸ்த் தெரிவித்துள்ளார்.
இமயமலையைச் சேர்ந்த மலைச்சிகரமான திரிசூல் சிகரத்தில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது. சமோலி மாவட்டத்தில் இந்தாண்டு பலமுறை மேகவெடிப்பு ஏற்பட்டு வெள்ள பாதிப்பு நிகழ்ந்துள்ளது. நாட்டில் இயற்கை பேரிடரை அதிகம் சந்திக்கும் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: செப்டம்பரில் 23% உயர்வு கண்ட ஜி.எஸ்.டி வசூல்